Thursday 6 September 2012

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து – 11 பேர் கைது


சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமுறைவாக உள்ள ஆலை அதிபர் முருகேசனை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

சிவகாசிக்கு அருகிலுள்ள முதலிப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று நண்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 38 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் வெடித்துச் சிதறியதில், ஒட்டுமொத்த தொழிற்சாலையும் இடிந்து தரை மட்டமானது. இதில், தொழிலாளர்கள் அனைவரும் பல அடி தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனர்.

தகவலறிந்து அவர்களை காப்பாற்றச் சென்றவர்களும், வேடிக்கைப் பார்த்தவர்களில் பலரும் தீ யில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கான உரிமம் ஏற்கனவே ரத்தாகியுள்ளது.. ஆயினும் அதன் உரிமையாளர் முருகேசன் தொடர்ந்து நடத்தியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதவிர, அந்த ஆலையில் 40 வகையான விதிமுறை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. பட்டாசு தயாரிப்பில் சுத்தியல் போன்ற கனமான பொருட்களை பயன்படுத்தியது, அளவுக்கு அதிகமான வெடி பொருட்களை சேமித்து வைத்திருந்தது போன்றயே விபத்துக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில்,  அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

puthiyathalaimurai.tv(6 September 2012 )
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More